தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் 36 வாகன ஓட்டிகளின் உரிமம் ரத்து! போக்குவரத்து துறை அதிரடி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வான விபத்துகளை தடுக்க போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் சாலை விதிகளை மீறுவது, அதிகாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றி செல்வது போன்ற விதிமுறைகள் ஈடுபடும் ஓட்டுனரின் உரிமை ரத்து செய்யப்பட்டு வருகிறது.

அதேபோன்று செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டுவது, போதையில் வானங்களை ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆறு மாதம் வரை ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் மட்டும் சேலம் மற்றும் தர்மபுரி சாலை விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்திய 36 வாகன ஓட்டிகளில் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நடபாண்டில் இதுவரை வாகன விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்திய 376 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த மாதத்தில் மட்டும் தர்மபுரி, சேலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 36 வாகன ஓட்டிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மத்திய, மாநில அரசு போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனத்தை ஓட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

License of 36 motorists canceled in Dharmapuri and Salem districts


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->