வால்பாறையில் சோகம்: 05 வயது சிறுமியை கவ்விச்சென்ற சிறுத்தை: தேடும் பணி தீவிரம்..!
Leopard carries off 5 year old girl in Valparai
கோவை மாவட்டம் வால்பாறை அருகே வீட்டின் பின்புறம் நின்றிருந்த 05 வயது சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் நிறைந்திருக்கின்றன. இங்குள்ள தேயிலை தோட்டங்களில் தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
அங்குள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முண்டா, மனைவி மோனிகா தேவி, மகள் ரோஸ்லி குமாரி (வயது 5) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டின் பின்புறம் சிறுமி ரோஸ்லி நின்று கொண்டிருந்த போது, அங்கு மறைவில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று, சிறுமியை கவ்விக் கொண்டு வனப்பகுதிக்குள் ஓடியுள்ளது. இதையறிந்த சிறுமியின் பெற்றோரும், சக தொழிலாளர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய், கூச்சலிட்டனர். சிறிது நேரத்தில் சிறுமியின் ஆடை கண்டு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறைக்கு அவர்கள் தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுமியை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். இரவு நேரம் என்பதால் சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இதேபோன்று சிறுமியை சிறுத்தை கவ்விச் சென்று கொன்ற நிலையில், தற்போது அது போலவே மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
English Summary
Leopard carries off 5 year old girl in Valparai