ஐந்து வருடங்களில் தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவர்களின் எண்ணிக்கை.!! பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாகவே ஐஐடி பயின்று வரும் மாணவர்களின் தற்கொலை அளவு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து மகனை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கல்லூரிகளுக்கு அனுப்பி வந்தனர். 

இந்த நிலையில்., மாணவர்களின் தற்கொலை பிரச்சனை தொடர்ந்து வந்ததால் தற்போது விஸ்வரூபம் எடுத்து. மேலும்., வெளியான தகவலின் படி., கடந்த ஐந்து வருடங்களில் ஐஐடி மாணவர்கள் தற்கொலை 27 எண்ணிக்கையில் இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சந்திரசேகர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் விபரங்கள் மற்றும் அதற்கான காரணம்., இதனை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். 

died, murder, killed, suicide attempt,

இந்த வழக்கை கவனித்த மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வித்துறை., இந்த மனுவிற்கு பதில் அளித்துள்ளது. இந்த பதிலில்., கடந்த ஐந்து வருடங்களில் ஐஐடி மாணவர்கள் 27 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளது. 

இதில் சென்னையில் 7 பேரும்., காரக்பூரில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும்., குறைதீர்ப்பு மையம் மற்றெம் ஒழுங்கு நடவடிக்கை குழு., ஆலோசனை மையம் ஆகியவற்றை ஒவ்வொரு கல்லூரிகளிலும் செயல்படுத்தி வருவதாகவும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் குழுமத்தின் ஐஐடியில் பல மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில்., தற்போது உயிரிழந்த மாணவிக்காக விசாரணைகள் அதிரடியாக்கப்பட்டது பெரும் வேதனை அளிப்பதாகவும் இணையதள நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

last five year 27 students died attempt suicide in IIT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->