எங்க தாய்மொழியை படிக்க முடியல! ஆளுநரிடம் தமிழக அரசு மீது புகார் அளித்த மொழி சிறுபான்மையினர்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் கல்விக் கொள்கைகளால் தங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மொழி சிறுபான்மை அமைப்பினர் ஆளுநரை சந்தித்து புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த தமிழக ஆளுநர் மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழக ஆளுநர் ரவியை மொழி சிறுபான்மை அமைப்பின் உறுப்பினர்கள் நேரில் சந்தித்தனர்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென் மாநில மொழிகள் உட்பட வேறு எந்த இந்திய மொழியையும் அனுமதிக்க வகை செய்யாத மாநில அரசின் கொள்கைகளால், தங்கள் பிள்ளைகளுக்கு தாய் மொழியை கற்பிக்க இயலாத முடியவில்லை என்று, ஆளுநரிடம் தங்களின் கஷ்டங்களை விளக்கியுள்ளனர். 

மேலும், அவர்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு குறித்தும் ஆளுநரிடம் விளக்கம் அளித்தனர்,

தமிழக அரசின் கொள்கையால் சுமார் 2 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மொழி சிறுபான்மையின மக்கள் தங்களின் தாய் மொழி மற்றும் கலாச்சதுரத்தை மறந்து மறந்து உள்ளதாகவும் ஆளுநரிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

வளமான இந்த தமிழ் மொழியை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் எங்களுடைய தாய் மொழியை கற்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் மொழி சிறுபான்மையினர் கோரிக்கை விடுத்தனர்" என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Language Minority Report to TN Governor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->