கூடலூர் அருகே பரிதாபம்..! காட்டு யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பிதர்காடு வனசரகத்திற்கு உட்பட்ட அயனிப்புர பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாஸ்கரன் (50). இவர் நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சாலையோரம் யானை ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. இதைப்பார்த்த பாஸ்கரன் யானையிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால் பாஸ்கரனை துரத்தி வந்த யானை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் பாஸ்கரன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து பாஸ்கரனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பாஸ்கரனை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாஸ்கரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பாஸ்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் யானை நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laborer killed by Elephant attack in gudalur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->