கொலுசுக்கு பாலிஷ் : இளம்பெண்ணை ஏமாற்றி 4 பவுன் அபேஸ்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மல்லிப்பட்டியை சேர்ந்தவர் துரை. இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி அஸ்வினி (வயது23).

இந்நிலையில், நேற்று மதியம் ஒரு மர்ம நபர் துரை வீட்டிற்கு வந்து செயின் பாலிஷ் போடுவதாக கூறியுள்ளார். இதை  நம்பிய அஸ்வினி தனது காலில் அணிந்து இருந்த கொலுசை கொடுத்துள்ளார்.

அந்த மர்ம நபர்  கால் கொலுசை நன்றாக பாலீஷ் போட்டு கொடுத்துள்ளார். அதன் பின்னர் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க நகையை கழட்டி  கொடுத்துள்ளார். அந்த நபர் நூதன முறையில் பெண்ணிடம் இருந்து செயினை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பெருபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி :

சூளகிரி காவல்நிலைய போலீசார் காமன்தொட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.

சோதனையில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 1849 கிலோ குட்கா இருந்துள்ளது. இதனையடுத்து, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், பெங்களூரை சேர்ந்த சிவன்னசெட்டி (வயது38), பிரதீபா ஆகிய இருவரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

krushnakiri forgery case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->