போச்சம்பள்ளி சந்தை 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை..! - Seithipunal
Seithipunal


தடையை மீறி நடைபெற்ற போச்சம்பள்ளி வாரசந்தையில் 5 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி வாரசந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் கூட்டப்படும். சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வியாபாரிகள் பொதுமக்கள் அதிக அளவில் இந்த சந்தையில் கூடுவர். கொரோனா பரவல் அதிகரித்ததால் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தையில் வியாபரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஆடி 18 வருவதையொட்டி போச்சம்பள்ளி சந்தையில் பெரும்பாலான கடைகள் இன்று திறக்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை வளாகத்திற்க்குள் விற்பனை தடைசெய்யபட்ட நிலையில், அதை மீறி இன்று சந்தையில் விற்பனை கலைகட்டியது.

சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டன. சுமார் 10 மேற்பட்ட ஆடுகள் விற்பனை ஆயின. வெள்ளாடு, செம்மறி ஆடு, பொட்டு, மயிலை என பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. 

10 முதல் 15 கிலோ வரையிலான ஆடுகள் சுமார் 15 ஆயிரம் வரை விற்பனை ஆயின. இதனால் விவசாயிள் மகிழ்ச்சியடைந்தனர். தடையை மீறி நடந்த இந்த சந்தையில் சுமார் 5 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை ஆயின. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் வியாபரிகளும் பொதுமக்களும் அலட்சியம் காட்டியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Pochampalli Sheep Sales Reach Rs 5 Crore on One Day at Pochampalli market


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->