கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி முடிவெடுத்த கிராமம்.. தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த சுவாரசியம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, மக்கள் தேவையின்றி நடமாடுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியவும், சானிடைசரால் கைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல், சளி, தலைவலி, உடல் வலி போன்றவை இருக்கும் பட்சத்தில், மருத்துவமனையில் கொரோனா சோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று தமிழக அரசு கூறிவரும் நிலையில், தினமும் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நிர்வாகிகள் சார்பாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, விதியை மீறினால் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பருகூர் மற்றும் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் போச்சம்பள்ளி, சாந்தூர், வேலம்பட்டி, பாலோகுளி ஆகிய கிராமங்கள் உள்ளது. 

இந்த கிராமங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடைகள் அனைத்தும் 11 நாட்களுக்கு மூடப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் உள்ளூரில் இருந்து வெளியூர் செல்லவும், வெளியூர் நபர்கள் ஊருக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கிராம மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri 4 village announce strictly Lock Down


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->