கோவையில் முக்கிய புள்ளியின் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், கரூரை தொடர்ந்து தற்போது கோவையிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் டாஸ்மாக் மேலாளர் முத்து பாலன் என்பவர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநில பதிவெண் கொண்ட இரண்டு கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், முத்து பாலன் வீட்டில் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிய ஏந்திய சிறப்பு அதிவிரைவு காவல் படை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் ஐந்து பேர் இந்த சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் வீரா சாமிநாதன் வீட்டில் நேற்றுமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுனர்.

தமுத்துப்பட்டியில் உள்ள சாமிநாதனின் தோட்டத்து வீட்டிலும் அமலாக்கத்துறையின் ஒரு குழு சோதனையில் இறங்கியது. சாமிநாதன் சுமார் 25 மாவட்டங்களில் செந்தில்பாலாஜிக்காக டாஸ்மாக் பார் கலெக்ஷன் ஏஜெண்டாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக சொல்லப்படுகிறது.

இதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் வீடு உள்பட கரூரில் 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய துணை ராணுவப் படையின் பாதுகாப்போடு, கரூரில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரின் (சங்கர்) வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai TASMAC muthu balan house ED Raid


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->