கோவையில் அசத்தும் விஜய் மக்கள் இயக்கம்! 234 தொகுதி மட்டுமல்ல, அனைத்து வார்டுகளுக்கும் பறந்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே விஜய் மக்கள் இயக்கத்தின் சில அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதியிலும் வார்டு வாரியாக புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தவும், பெயர் பலகை திறக்கவும் இயக்க நிர்வாகிகளுக்கு, இயக்கத்தின் தலைமை உத்தரவிட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் அறிவுறுத்தலின் பேரில், அந்த இயக்கத்தின் சூலூர் ஒன்றிய மாணவரணி தலைமை சார்பாக, கருமத்தம்பட்டி நகராட்சி 25-வது வார்டில், லியோ பாய்ஸ் ஏற்பாட்டில், 'விஜய் மக்கள் இயக்கம்' பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, 50 நபர்களுக்கு குடம், மாணவ - மாணவியர்களுக்கு தளபதி நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது.

முன்னதாக விஜய் மக்கள் இயக்கத்தின் அறிவிப்புப்படி, "தளபதி விஜய் பயிலகம்" என்ற பெயரில் கருமத்தம்பட்டி நகராட்சி 4 வது வார்டு, கருவேலங்காடு பகுதியில், பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இரவு நேர பாடசாலை துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க சூலூர் ஒன்றிய தலைமை மாணவரணி சார்பாக இரண்டாவது "தளபதி விஜய் பயிலகம்" மோப்பிரிபாளையம் பேரூராட்சி, காந்தி நகர் 'தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக கார்த்திக், பிரவீன், யுவா, ஆகியோரின் ஏற்பாட்டில் நேற்று (06.08.2023) தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த இரு நிகழ்ச்சிகளிலும், விஜய் மக்கள் இயக்கத்தின் ஒன்றிய தலைவர் சத்திய சுந்தரம், நிர்வாகிகள் RM கணேசன், கில்லி கணேசன்பாலாஜி, ஜில்லா பாலு, கத்தி ராஜா, கருவேலங்காடு பிரசாந்த், குட்டிப்புலி (எ) அஜித் மற்றும் இயக்க நிர்வாகிகளும், பொதுமக்களும், குழந்தைகளும் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Soolur Vijay Makkal Iyakkam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->