தமிழகத்தையே உலுக்கிய 17 பேர் பலியான கோவை சம்பவத்தில் திடீர் திருப்பம்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்ததால், மேட்டுப்பாளையம் பகுதி முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்த நிலையில்தான், மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில், நேற்று அதிகாலை 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

இந்த கோர விபத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் பலியாகினர் இந்த சம்பவம் தமிழகத்தில் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சி அடையவைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர்.

வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் பலியான 17 பேரின் குடும்பங்களுக்கும், தலா 4 லட்சம் ரூபாயை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் தான் இந்த துயர சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 

சம்பவ நடைபெற்ற இடத்திலும் எந்த வீடும் தானாக இடிந்து விழவில்லை. மாறாக வீடுகளின் அருகில் உயரமாகக் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர்தான் இந்த வீடுகளின் மேல் விழுந்துள்ளது என தெரியவந்துள்ளது. தனி நபருக்கு சொந்தமான சுவர் விழுந்தே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

சம்பவம் நடைபெற்ற பகுதியில் வீடுகள் தாழ்வான பகுதியில் இருக்கின்றன. விபத்துக்குள்ளான சுற்றுச் சுவர், 20, 25 அடி உயரத்தில் சுமார் 80 அடி நீளத்தில் இருக்கிறது. நீண்ட காலமாகவே, சுற்றுச்சுவர் ஆபத்து நிறைந்தது என எத்தனை முறை சொன்னாலும் கேட்கவில்லை. அந்த அலட்சியத்தில் தான் கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 

இந்தநிலையில், மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான விவாகரத்தில் வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்ட்டுள்ளார். சிவசுப்பிரமணியத்தை சிறுமுகை பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சிவசுப்ரமணியம் மீது போலீசார், ஏற்கனவே இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai incident house owner arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->