#கோவை | ஜகா வாங்கிய ஆளுங்கட்சி! எச்சரிக்கையை மீறி நடந்த போராட்டம் - தொடங்கியது பேச்சுவார்த்தை! - Seithipunal
Seithipunal


தீபாவளி போனஸ், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி, கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதி தூய்மை பணியாளர்கள் நேற்று முதல் போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தொழிற்சங்கங்கள் பங்கேற்காத நிலையில், போராட்டத்தில் பங்கேற்கும் நபர்கள் பணிக்கு வருபவர்களை தடுக்கக்கூடாது என்று, மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி நேற்று சுமார் 500 தூய்மை பணியாளர்கள் காந்தி சிலைக்கு மனு கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கோவை ESI மருத்துவமனையிலும் குறைந்தபட்ச கூலி வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியரின்  முகாம் அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Cleaning workers protest 3 oct 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->