கோவையில் இருந்து வந்த மெசேஜ்.. அவங்களும் திமுகவுக்கும் ஆதரவு.. குஷியில் மு.க ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைப் பொதுத் தர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் அனைவராலும் உற்று நோக்கப்படும் தொகுதியாக கோவை இருந்து வருகிறது. 

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. பாஜக வெற்றி பெற்ற ஒரு தொகுதியும் அதிமுக ஆதரவோடு கைப்பற்றியுள்ளது. 

இத்தகைய சூழலில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் அண்ணாமலையும், திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். சமுதாய அடிப்படையில் பார்த்தால் அண்ணாமலை மற்றும் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். 

ஆனால் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். இதனால் கோவை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இத்தகைய பரபரப்பான சூழலில் கோவையில் செயல்பட்டு வரும் அனைத்து பிள்ளைமார் பேரவை திமுக கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிள்ளைமார்களும் நமது பாராளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க நமது சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai all Pillai organisation support to DMK


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->