அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபடுவோம்..உழைப்பாளர் தின வாழ்த்துகள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்!! - Seithipunal
Seithipunal


மே-1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தொழிலாளர் நாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிவுள்ளதாவது,

உலகம் உயர உயிரைக் கொடுத்து உழைக்கும் பாட்டாளிகளை போற்றும் மாற்றிய மே நாளைக் கொண்டாடும்  பாட்டாளிகளுக்கு  தொழிலாளர்கள் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.


தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில் மறைமுகமாக மறுக்கப்பட்ட உரிமைகள் இப்போது நேரடியாகவே மறுக்கப்படுகின்றன. உழைக்கும் தொழிலாளர்களின் முதல் உரிமை அவர்களுக்கான பணிப்பாதுகாப்பு. ஆனால், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிரந்தர பணியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக குத்தகை முறை பணி நியமனங்கள் திணிக்கப்படுகின்றன. இந்த முறையில் அரசுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களால் அதிகாரம் செலுத்தும் சக்திகள் தான் உழவர்களின் உழைப்பை சுரண்டி கொழுக்கின்றனர். உழைக்கும்  தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை இந்த இடைத்தரகர்களிடம் தாரை வார்த்து விட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக 135 ஆண்டுகளுக்கு முன் பாட்டாளி வர்க்கம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து வென்றெடுத்ததைப் போல, இப்போதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. பாட்டாளிகளே.... மனித நீதியாக இருந்தாலும், சமூக நீதியாக இருந்தாலும் நீங்கள் போராடாமல் உங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியாது. இதை உணர்ந்து நமக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் அனைத்தையும் வென்றெடுக்க ஒன்றுபடுவோம்; போராடுவோம்; வெற்றி பெறுவோம்  என்று கூறி, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மீண்டும் ஒரு முறை பாட்டாளிகள் நாள் நல்வாழ்த்துகளை உளமாறத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இவ்வாறு கூறிவுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Happy Labor Day to all workers by pmk leader anbumani


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->