கொடைக்கானலில் அரசு பேருந்துகளுக்கு அபராதம்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கொடைக்கானலில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

கொடைக்கானலில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாக உள்ளது. கொடைக்கானலுக்கு வருகின்ற சில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரங்கள் உள்ளன. 

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதில் அரசு பேருந்துகளில் அதிகம் சத்தம் எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்துவது தெரியவந்து பறிமுதல் செய்து 2 அரசு பேருந்துகளுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் பயன்படுத்தினால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodaikanal Govt buses with loud horns fined


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->