கொடைக்கானல் சாலையில் உலா வந்த காட்டெருமைகள்! அவதியில் பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


சாலையில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்ததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் பெரும் அவதி அடைந்தனர்:

திண்டுக்கல்: கொடைக்கானலில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. மலை கிராமங்களான பூம்பாறை, கிளாவரை மற்றும் வில்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது . 

இந்நிலையில் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் நகர் பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகிறது. 

அது போல் கொடைக்கானல் நாயுடுபுரம் செல்லக்கூடிய பிரதான சாலையில் காட்டெருமைகள் கூட்டமாக வந்ததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகினர். 

மேலும் காட்டெருமைகள் சாலையை வழி மறித்ததால் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் அன்றாட தேவைகளுக்கும் செல்ல முடியாமல் தவித்தனர். 

எனவே காட்டெருமை கூட்டத்தை கண்காணித்து வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். 

காட்டெருமை கூட்டம் நீண்ட நேரம் சாலையில் நின்று கொண்டிருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர் வனத்துறையினர் வந்து காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodaikanal buffaloes roaming road side


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->