கரூர் பேரதிர்ச்சி வழக்கு: ஐ.பி.எஸ். பிரவீன் குமார் தலைமையில் சி.பி.ஐ. குழு கரூரில் ரகசிய விசாரணை ஆரம்பம்...! - Seithipunal
Seithipunal


கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தவெக தலைவர் விஜய்

அந்த சம்பவம் தொடர்பாக 5 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 13-ந்தேதி நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது.அதனைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ. விசாரணைக் குழுவினர் இன்று கரூர் வந்தடைந்துள்ளனர்.

அவருடன் ஏ.டி.எஸ்.பி. முகேஷ்குமார், டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோரும் இணைந்துள்ளனர்.இந்த குழுவினர் தற்போது பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளனர்.

இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சேகரித்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் சாத்தியமானால், இன்று அல்லது நாளையே முக்கியமான சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் விசாரணை ஆரம்பிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur terror case IPS Praveen Kumar led CBI team begins secret investigation in Karur


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->