கரூர்: ஆசிரியர் மரணத்தில் திடுக்கிடும் தகவல்.! அந்த வேதியல் ஆசிரியர் யார்? மனைவி அளித்த புகார்.!  - Seithipunal
Seithipunal


கரூரில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரின் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் கடந்த 19ஆம் தேதி பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் அந்த தற்கொலை கடிதத்தில், "எனக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் யார் என்று சொல்வதற்கு பயமாக உள்ளது., நான் வாழ்வதற்கு ஆசை, ஆனால் செல்கிறேன். இந்த பூமியில் வாழ்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால்., நான் அனைவருக்கும் உதவி செய்து வாழ்வேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த கடிதம் மற்றும் அந்த மாணவி தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி பயின்ற அதே பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் மாவட்டம், காமராஜர் நகரில் வசித்துவந்தவர் சரவணன் (42). பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின், அதே பள்ளியில் இவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பள்ளிக்கு செல்லாமல், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

அவரின் தற்கொலை கடிதத்தில், "எனது அம்மா, ஜெயந்தி, அக்கா, வளர்மதி, கல்யாணி, பாலாஜி அனைவரையும் நான் ரொம்ப மிஸ் பண்றேன். ஜெயந்தி என்னை மன்னித்துவிடு., என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள்.

மாணவர்கள் முன் அவமானமாக இருக்கிறது. எனக்கு வாழ ஆசை இல்லை. இன்று காலை வந்தவுடன் மாணவன் என்னை தவறாக கூறுகிறான். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. 

நான் மாணவர்களை கோபத்தில் திட்டி இருக்கிறேன். அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். நன்றாக படியுங்கள். ஐ மிஸ் யூ ஆல்., அம்மா ஐ மிஸ் யூ" என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சரவணன் மனைவி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

 தற்கொலை செய்துகொண்ட கணித ஆசிரியர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் தாயார், வேதியல் ஆசிரியர் தான் எனது மகளுக்கு தொல்லை கொடுத்து இருப்பார் என்று குற்றச்சாட்டு முன்வைத்து இருந்த நிலையில், தற்போது கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur teacher saravanan suicide case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->