கரூர் கூட்ட நெரிசல்: ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் சிபிஐ விசாரணை!
Karur Stampede Ambulance driver CBI
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த அக்டோபர் 27 அன்று நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 110 பேர் காயமடைந்ததும் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயரச்சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) விரிவான விசாரணை நடத்தி வருகிறது.
இதற்காக, சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், வீடியோகிராபர்கள், காவல் அதிகாரிகள் உள்ளிட்ட 306 பேருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, அவர்கள் ஒவ்வொருவராக நேரில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரண்டாவது நாளாக 7 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் ஒரு உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்றது. இன்று மூன்றாவது நாளாக மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டனர். சம்பவம் நடந்தபோது அவர்களுக்கு யார் தொலைபேசி செய்தார்கள், எந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்தது, அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் எத்தனை பேர் உயிரிழந்தனர், எத்தனை பேர் நேரடியாக பிணமாக எடுத்துச் செல்லப்பட்டனர் உள்ளிட்ட பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
English Summary
Karur Stampede Ambulance driver CBI