அலட்சியத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.! உயிரை காக்க செவிலியர்கள் எடுத்த அதிரடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிபுரிகின்றனர். இன்று காலை பணிக்கு வந்த செவிலியர்கள் அனைவரும் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில் அனைவரும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற  ஆர்பாட்டத்தின்போது தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் சார்பாக போராட்டத்தில் மாநில துணை தலைவர் நல்லம்மாள், மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் செல்வராணி, பொருளாளர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கரூர் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் கூறுவது... எங்களுக்கு அதிகப்படியான வேலை கொடுப்பதாகவும் மற்றும் ஆய்வக இரத்த பரிசோதனை நிபுணர்கள் புற நோயாளிகளுக்கு மட்டும் பரிசோதனை செய்கின்றனர். உள் நோயாளிகளுக்கு செவிலியர்களை பரிசோதனை செய்ய சொல்கின்றனர்  

நோயாளிகளுக்கு மருத்துவர்கள் போட வேண்டிய ஊசியை செவிலியர்களை போட சொல்கின்றனர். மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் தேவையான சிகிச்சையை பெற்ற உடன் மருத்துவர்கள் தரவேண்டிய அறிக்கையை மருத்துவர்கள் தராமல் செவிலியர்களை தர சொல்லி வற்புறுத்துகின்றனர்

இதுபோன்று பல்வேறு வகைகளில் எங்களுக்கு வேலை பளு அதிகமாக்குகின்றனர். இதன் காரணமாக நோயாளிகளை கவனிக்க இயலவில்லை. இது குறித்த தகவலை எங்களது உயர் அதிகாரிக்கு தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மருத்துவ துறையின்  உயர் அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு  உரிய நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.  

அரசு மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக நடந்த இந்த போராட்டத்தின் காரணமாக மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் பாதிப்பும், பல மணி நேரம் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு பெரும் துயருக்கு ஆளாகியிருந்தனர். இதனை கவனித்த மருத்துவமனை தலைமை மருத்துவர் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur nurses strike about patients carrying


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->