11.05 ஆகல அதுக்குள்ள அட்டகாசத்தை ஆரம்பித்த கரூர் திமுக.. அதிமுகவினர் மீது தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திரும்புகையில், திமுகவினர் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது. 

கரூர் மாவட்டத்திலுள்ள மாவடியான்கோவில் 25 ஆவது தெரு பகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதன் பின்னர், இரவு 9.30 மணியளவில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார். 

இந்நிலையில், இரவு 10 மணிக்கு மேல் அதிமுகவினர் பிரச்சாரம் செய்வதாக கூறி, திமுகவினர் அமைச்சருடன் வந்து அங்கு காத்திருந்து புறப்படலாம் என்று இருந்த அதிமுகவினரின் வாகனத்தையும், இளைஞர்களையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் இரு தரப்பும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு சமயத்தில் இது கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது, இரு கட்சிக்காரர்களும் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவத்தில், அமைச்சரின் உதவியாளர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் காயமடைந்தனர். 

இவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அனைவரையும் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், அமைச்சர் 9.30 மணிக்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்றுவிட்ட நிலையில், வாக்கு சேகரிக்க வந்துவிட்டு களைப்பில் இருந்தவர்கள் பொறுமையாக புறப்படலாம் எண்ணி இருந்துள்ளனர். இதன்போது, திமுகவினர் அவர்களை முற்றுகையிட்டு தாக்கி இருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.

கரூர் தொகுதியில் தான் சட்டவிரோத செயல்களை ஊக்கப்படுத்தி பேசிய திமுக ச.ம.உ வேட்பாளர், கட்சித்தாவல் மன்னன் என்று அரசியல் விமர்சகர்களால் அழைக்கப்படும் செந்தில் பாலாஜி திமுக சார்பில் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur DMK Supporters Attack AIADMK Minister MR Vijayabasker Supporters


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->