அதிமுகவின் கனவில் மண்ணா? கர்நாடகாவில் சற்றுமுன் நடந்த சந்திப்பு!  - Seithipunal
Seithipunal



அதிமுகவின் ஒற்றை தலைமை விவரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், வருகின்ற மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலில் ஓ பன்னீர்செல்வத்தின் அணியினர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட மும்மரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் புதிய நிர்வாகிகளை நியமித்து ஓபிஎஸ் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதே சமயத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பாஜகவுக்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதிமுக சார்பாக கர்நாடகா கர்நாடகாவில் நாங்கள் செல்லும் வேட்பாளர்கள் தான் போட்டியிட வேண்டும் என்ற அழுத்தத்தை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். 

இது குறித்து அதிமுக மூத்த தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, டெல்லியில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை செய்ததாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை, ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி தனது ஆதரவாளர்களுடன் நேரில் சந்தித்து உள்ளார்.

அப்போது ஓ பன்னீர்செல்வம் கொடுத்த கடிதம் ஒன்றையும் எடியூரப்பாவிடம் வழங்கி உள்ளார். மேலும் அதிமுக இரண்டாக பிரிந்தபோதிலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் எங்கள் பக்கம் தான் உள்ளனர். எனவே எங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் புகழேந்தி கொடுத்ததாக தெரிய வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Ediyurappa meet Pugazhendhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->