செந்தில் பாலாஜிக்காக வாதாடிய கபில் சிபிலுக்கு திடீர் நெஞ்சுவலி.! நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு நீதிமன்ற காவலில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தின் உத்தரவின் படி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு இதயத்தில் நான்கு அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட நிலையில் தற்பொழுது அவர் காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது அவருடைய மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த ஆட்கொணர்வு வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டதன் அடிப்படையில் சென்னை நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் மூன்றாவது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தினமும் விசாரிக்க உத்தரவிட்ட நிலையில் கடந்த ஜூலை 6ம் தேதி முதல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதாடி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு ஆஜராகி கபில் சிபில் வாதாடிய போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக வழக்கின் விசாரணையில் இருந்து பாதியில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இளங்கோ ஆஜராகி வாதிட்டார்.

மேலும் கபில் சிபில் மருத்துவ பரிசோதனைக்கு செல்வதால் ஜூலை 13ஆம் தேதி வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது. அப்பொழுது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் தனது வாதத்தை முன்வைத்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து தனது வாதத்தை முன்வைத்த கபில் சிபிலுக்கு சரியாக 12:00 மணி அளவில் திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.

அப்போது அவர் "மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் லேசான வலி ஏற்பட்டுள்ளது. எனவே எனது வாதத்தை தொடர சிறிது நேரம் கால அவகாசம் வேண்டும்" என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயனிடம் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பகல் 12:15 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கும் அறிவித்ததை அடுத்து மீண்டும் விசாரணை பிற்பகல் 12:20 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஆஜரான கபில் சிபிலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KapilSibal has sudden chest pain during argument in SenthilBalaji case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->