கன்னியாகுமரியில் பிடிபட்ட புலி! வண்டலூர் பூங்காவில் சிகிச்சை! தொடர் கண்காணிப்பில் ஊழியர்கள்! - Seithipunal
Seithipunal


கடந்த 20 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் சிற்றாறு சிலோன் காலணியில் புலி ஒன்று சுற்றித்திரிந்து அங்கிருந்த ஆடுகள், நாய்களை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. 

அந்த புள்ளியை கடந்த 4நாட்களுக்கு முன்னர் பேச்சுப்பாரை கல்லறை வயல் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். 

13 வயதுடைய ஆண் புலி மிக பலவீனமாக காணப்பட்டதை தொடர்ந்து, அந்த புலியை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த மாதம் 10 ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் கொண்டு சேர்த்தனர். 

சோர்வாக இருந்த அந்த புலிக்கு கால்நடை மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். வண்டலூர் பூங்கா அதிகாரிகள், தற்போது சிகிச்சை அளித்த புலியின் உடல் நலம் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

புலிக்கு உணவாக இறைச்சிகள் வழங்கப்படுகின்றது. இது குறித்து பூங்கா அதிகாரிகள் தெரிவிக்கையில், கன்னியாகுமரியில் இருந்து கொண்டுவரப்பட்ட புலிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

அதற்கான உணவுகளும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த ஆண் புலி பூரண குணமடைந்து விடும். அதற்கான பயிற்சிகளையும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்கள் கொடுப்பார்கள். 

பின்னர் அந்த புள்ளியை பார்வையாளர்கள் பார்ப்பதற்காக விடுபடும் என தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari tiger caught treated Vadalure park


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->