மணமகனுக்காக காத்திருந்த பெண்ணிற்கு பேரதிர்ச்சி... காதலியை தேடி.. விழிபிதுங்கிய மணப்பெண்.! - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த மெக்கானிக், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், பெண் எஞ்சினியர் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. நிச்சயத்தின் முடிவில் வரும் நேற்று (26 நவம்பர் 2020) திருமணம் நடைபெறுவதாக தேதி குறிக்கப்பட்டுள்ளது. 

திருமணத்தை வெகுவிமர்சையாக நடத்துவதற்காக பத்திரிகைகள் அடித்து உற்றார், உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர். மணமகளும் தனது எதிர்கால வாழ்க்கை பயணத்திற்கு உற்சாகமாக தயாராகியுள்ளார். நேற்று முன்தினம் திருமணத்திற்கான சாஸ்திர சடங்குகள் நடைபெற்று முடிந்துள்ளது.  

மாப்பிள்ளை வரவேற்பில் மணமகனை எதிர்நோக்கி காத்திருந்த மணப்பெண்ணிற்கு, அதிர்ச்சி தரும் செய்தியாக மாப்பிள்ளையை காணவில்லை என்ற செய்தி வந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர். 

இதன்பின்னர் நடைபெற்ற வாக்குவாத விசாரணைக்கு பின்னர், மாப்பிள்ளை பெண் ஒருவரை காதலித்து வந்ததும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணமகனுக்கு மற்றொரு பெண்ணை பார்த்து பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கையில், இந்த விஷயம் அரங்கேறியதும் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்காததால், அவர்கள் இது குறித்து விசாரணை செய்யவில்லை.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Marriage Stopped due to Boy Escape and getting Marriage with Love girl


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal