கன்னியாகுமரி | குதிரைகளில் அ.தி.மு.க.பொன் விழா எழுச்சி மாநாடு பேரணி! - Seithipunal
Seithipunal


மதுரையில் வருகின்ற 20ஆம் தேதி அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாடு நடக்கிறது. இதனால் கன்னியாகுமாரியில் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ ஏற்பாட்டின் பேரில் குதிரைக்காலுடன் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. 

கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து, இந்த விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. இந்த மாநாடு விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட அவை தலைவர் அகஸ்தீஸ்வரம், ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க செயலாளர், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர், லீபுரம் ஊராட்சி பொறுப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியானது விவேகானந்தா ராக் சாலை வழியாக படகு துறையை சென்றடைந்தது. சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம்  அ.தி.மு.க மாநாட்டுக்கு திரண்டு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. 

மேலும் படகில் சென்றும் அ.தி.மு.க மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. படகு துறையில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா என பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மாநாடு பதாகைகளை பிடித்தபடி குதிரையில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்த நிகழ்ச்சியானது கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வெளிநாடு மற்றும் வெள்ளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு பயணிகளை வெகுவாக கவர்ந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari horses awakening conference awareness


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->