கன்னியாகுமரி | மகனை கொன்று தம்பதியர் தற்கொலை! கடிதத்தில் பரபரப்பு தகவல்! போலீசார் தீவிரம்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம்: முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 40). இவர் எம்.இ., பி.எல். பட்டதாரி. இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். 

இவருக்கும், தக்கலை மணலி பகுதியை சேர்ந்த சைலஜா என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களது மகன் ஜீவா (வயது 7). இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறினர். 

பின்னர் முரளிதரன் ஐ.டி. கம்பெனி வேலையை விட்டு விட்டு நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர்களது வீட்டுக்கதவு நேற்று நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. அதனை அடுத்து அங்கு வந்த சைலஜாவின் தந்தை கோபால், மகளை வீட்டிற்கு வெளியே நின்று அழைத்துள்ளார். 

ஆனாலும் நீண்ட நேரமாக கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, முரளிதரன் வீட்டின் ஹாலில் மின் விசிறியில் தூக்கிட்ட தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், சைலஜா மற்றொரு அறையில் தூக்கிட்ட நிலையிலும் இருந்துள்ளனர். 

அதனை அடுத்து பேரன் ஜீவா, முகத்தில் பாலி்தீன் கவர்கள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் பிணமாக கிடந்து உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த கோபால், இது குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், மகனை கொன்று விட்டு தம்பதியர் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தக்கலை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

விசாரணையில் வீட்டில் இருந்து ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில் மகன் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டதாகவும், பல லட்சம் ரூபாய் செலவழித்தும் தவமாய் பெற்ற மகனின் நோயை குணப்படுத்த முடியாததால் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டதாகவும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

தற்கொலை செய்த 3 பேரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari couple killed son committed suicide


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->