சொத்திற்காக சிறுமி, தாயை மிரட்டிய உறவினர்கள்.. ஆடியோ பதிவு செய்து கண்ணீர் வடித்த சிறுமி.. நடவடிக்கை எடுத்த காவல்துறை.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தினை சார்ந்த மாணவிக்கு, அவரது உறவினர்கள் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். மேலும், தங்களுக்கு உதவ யாரும் இல்லை என்று பதிவு செய்யப்பட்ட வாட்சாப் ஆடியோ அப்பகுதியில் பெரும் வைரலாகி வந்தது. 

இந்த ஆடியோ குறித்த தகவல் சென்னை காவல் கண்காணிப்பாளருக்கு கிடைக்கவே, இந்த விஷயம் குறித்து விசாரணை செய்ய கூறி, கன்னியாகுமரி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஆடியோவை கண்ட அம்மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்களும் மாணவிக்கு உதவி செய்யும் பொருட்டு களத்தில் இறங்கியுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக மார்த்தாண்டம் காவல் துறையினர் விசாரணை செய்த நிலையில், அங்குள்ள இளவுவிளை பகுதியை சார்ந்த கல்லூரி மாணவி தான் இந்த ஆடியோவை பதிவு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த மாணவியின் தந்தை முன்னதாக இறந்துவிட்ட நிலையில், தாயார் சத்துணவு கூடத்தில் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு சொந்தமாக 12 சென்ட் நிலம் இருக்கும் நிலையில், இந்த மாணவியின் சித்தப்பா மகன் வீட்டிற்கு வந்து 12 சென்ட் நிலத்தினை கேட்டு பிரச்சனை செய்து வருவது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து காவல் துறையினர் பிரச்சனை செய்த அனைவருக்கும் எச்சரிக்கை வழங்கி, எழுதி வாங்கியுள்ளனர். மேலும், பின்னாளில் பிரச்சனை செய்தால் கடுமையான எச்சரிக்கை விடப்படும் என்றும் கூறியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Child Help by Police Relation Torture


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->