கன்னியாகுமரி | கனிம வளங்களை கடத்தி சென்ற 5 வாகனங்கள் பறிமுதல்! தப்பி ஓடிய ஓட்டுனர்கள்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் கனிம வளங்களை 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக உள்ளது.

இது போன்ற லாரிகள் இரவு பகலாக சாலையில் தொடர்ந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் தொடர் விபத்துக்களும் ஏற்படுகிறது. 

இதனை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து 
அதிக எடையை ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து அந்த வாகனத்தின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை வட்ட வழங்கல் அதிகாரி கொண்ட ஒரு குழு, படந்தாலுமூடு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த 5 வாகனங்களை நிறுத்தினர். 

போலீஸ் அதிகாரிகளை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு, ஓட்டுனர்கள் கீழே இறங்கி  தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அதிகாரிகள் குழு வாகனங்களை சோதனைசெய்ததில், அந்த வாகனங்களில் அனுமதி இன்றி கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. 

அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari 5 vehicles smuggled mineral resources


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->