திடீரென கடல் சீற்றம்.. இளைஞரின் செயலால்., எதிர்பாராத நேரத்தில் பறிபோன உயிர்.!  - Seithipunal
Seithipunal


நேற்று திடீரென கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் அருகே இருக்கும் அழிக்கால் என்ற மீனவ கிராமத்தில், கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், கடல் நீர் அங்கிருக்குந்த வீடுகளுக்குள் புகுந்துள்ளது. 

இதனை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞர், தன்னுடைய வீட்டிற்கு முன்பாக கடல் மணல் மூட்டைகளை கொண்டு வீட்டிற்கு புகும் கடல் நீரை தடுக்க முயற்சித்துள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக வந்த கடல் அலையானது வேகமாக மதில்சுவர் மீது மோதியதில் அஸ்வின் மீது இடிந்து விழுந்துள்ளது. இடிந்த சுவரானது அஸ்வின் மீது விழுந்ததில் அவர் படுகாயமுற்று உயிரிழந்தார். 

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட கோட்டாட்சியர் மயில் என்ற அதிகாரியை, அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நீண்ட காலமாக தங்களுடைய பகுதிக்கு கடல் அரிப்பு தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவு உள்ளிட்டவை அமைத்து தரக்கூறி மனு கொடுத்துடும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பி, வாக்குவாதம் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KANNIYAKUMARI MEN DEATH BY WALL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->