ஓசூரில் சர்வசாதாரணமாக கஞ்சா வளர்த்த விவசயிகள்! கம்பி என்னும் சோகம்!   - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே அட்டப்பள்ளம் என்னும் கிராமத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பண்டி கங்காதருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. 

அதனை தொடர்ந்து, தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான அஞ்செட்டி போலீசார், அட்டப்பள்ளம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் மிளகாய் தோட்டம், கனகாம்பரம் பூ தோட்டத்தில் ஆங்காங்கே சந்தேகிக்காத வகையில் கஞ்சா செடிகளை அங்கமுத்து, கோவிந்தன் என்ற  இரண்டு விவசயிகள் பயிரிட்டிருந்தது தெரிய வந்தது.

பின்னர் அவர்களை கைது செய்த போலிசார், மிளகாய் தோட்டம் மற்றும் கனகாம்பரம் பூ தோட்டத்தில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, அவற்றைத் தீயிட்டு கொளுத்தி அழித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanja in agricultural land at hosur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->