காஞ்சியில், பெற்றோரை இழந்து வாடும் சிறுவர்கள்.. கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் தாத்தா..!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எண்ணெய்காரன் தெரு பகுதியை சார்ந்தவர் ஞானப்பிரகாசம். சென்னையில் கார் ஓட்டுநராக ஞானப்பிரகாசம் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக கணவன் - மனைவிக்கு குடும்பத்தை நடத்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஞானப்பிரகாசம் சம்பவத்தன்று மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

இந்த தம்பதிகளுக்கு பரந்தாமன், திருமலை, ராமகிருஷ்ணன் என்ற மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், பெற்றோர்களை இழந்து மூவரும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சரஸ்வதியின் அப்பாவிற்கு 90 வயதாகும் நிலையில், அவரது பராமரிப்பில் குழந்தைகள் உள்ளனர். மேலும், வயதான தாத்தா குழந்தைகளின் கல்வி குறித்து ஐயம் கொண்டுள்ளார். 

மேலும், இது குறித்து அவர் கூறுகையில், நான் சாதாரண கூலித்தொழிலாளி.. ஒருவேளை உணவிற்கே நான் மிகவும் பரிதாப நிலையில் இருக்கிறேன். குழந்தைகளின் எதிர்கால செலவை என்னால் ஏற்கவும் இயலாது. என்னிடம் சொல்லிக்கொள்ளும் அளவு சொத்துப்பத்தும் இல்லை. அக்கம் பக்கத்தின் வழங்கிய பொருட்களை வைத்து சமைத்து சாப்பிட்டு வருகிறோம். நல்லுள்ளம் கொண்டவர்கள் குழந்தைகளுக்கு மட்டுமாவது உதவி செய்யுங்கள் என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram couple murder his sons Orphan request to help


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->