வாய்விட்டு கேட்ட கமல் - பச்சை கொடி காட்டுமா திமுக? உதயநிதியின் பளிச் பதில்! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவை தேர்தல் பணிகள் குறித்து, கோவையில் நேற்று மக்கள் நீதி மையம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையின் போது, வருகின்ற மக்களவைத் தேர்தலில் கோவையில் எனக்கு ஆதரவு பெருகி கொண்டிருப்பதால், போட்டியிட முடிவு செய்துள்ளேன். நம்முடைய கட்சி நிர்வாகிகளும் இந்த தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், "என்னுடைய விக்ரம் படத்திற்கு வரும் கூட்டம். மக்கள் நீதி மையத்திற்கு வராதா? கட்சித் தொண்டர்கள் கோவை தொகுதியில் போட்டியிட என்ன என்னை அழைக்கிறார்கள். என்னை அழைப்பது மட்டும் போதாது, இந்த தொகுதிகள் வேலை செய்ய நாற்பதாயிரம் பேரை தயார் செய்ய வேண்டும். 

எனக்கு மூக்கு உடைந்தால் கூட பரவாயில்லை, மருந்து போட்டுக் கொண்டு மீண்டும் கோவை தொகுதியில் நிற்க போட்டியிடுவேன்" என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், "கமலஹாசன் கோவை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவருக்கு திமுக கூட்டணியில் வாய்ப்பளிக்கப்படுமா" என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், "இது அவருடைய விருப்பம். எங்களுடைய கூட்டணியில் அவர் இன்னும் இணையவில்லை. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த முடிவுகளை கட்சியின் தலைவர் தான் எடுப்பார்" என்று தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamalhaasan say Kovai And Election 2024


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->