அரசியல் பரபரப்பு... முதலமைச்சரை சந்தித்து பேசிய கமல்ஹாசன்!  - Seithipunal
Seithipunal



மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சேலத்தில் சந்தித்து பேசினார். கமல்ஹாசன் வருகின்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

அதன்படி தனது பிரசாரத்தை மார்ச் 29ஆம் தேதி முதல் கமல்ஹாசன் தொடங்கினார். இதனை அடுத்து வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சுப்பராயனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். 

ஏப்ரல் 15ஆம் தேதி கோவையில் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். 

இந்நிலையில் பிரசாரத்திற்காக சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசி உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan meet CM Stalin


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->