காதலிக்க மறுத்த பெண் கொலை விவகாரம் - களமிறங்கும் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை..! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் தேவியானந்தல் கிராமத்தை சார்ந்த பெண்மணி சரஸ்வதி, நாடக காதல் கும்பலால் கொலை செய்யப்பட்டார். சரஸ்வதியை காதலிக்க கூறி காமுக நாடக காதல் கும்பல் வற்புறுத்திய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை கொடூர கும்பல் கொலை செய்துள்ளது. இந்த விஷயம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக இன்று காலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது கண்டன அறிக்கையை பதிவு செய்திருந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இளம்பெண் சரஸ்வதி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் உண்மை அறியும் குழு செல்கிறது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், " கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட, தேவியானந்தல் கிராமத்தில் வசிக்கும் வன்னியர் சமூகத்தை சார்ந்த திரு.வீரமணி அவர்களின் மகள் சரஸ்வதி என்பவர் தேர்தலுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கில், அதே ஊரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ரங்கசாமி, கிருஷ்ணசாமி, ரவீந்திரன் ஆகியோர் சரஸ்வதியை கொலை செய்ததாக நேற்று திருநாவலூர் காவல்துறையினர் கைது செய்து, உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உள்ளனர். 

சரஸ்வதியை ரங்கசாமி என்பவர் திருமணம் செய்ய வற்புறுத்தியதால், அதை சரஸ்வதி மறுத்ததால் மூன்று பேரும் சேர்ந்து சரஸ்வதியை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இது தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய, வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் வழக்கறிஞர் திண்டிவனம் பாலாஜி அவர்கள் தலைமையில், வழக்கறிஞர்கள் கள்ளக்குறிச்சி சிவராமன், கள்ளக்குறிச்சி துரைராஜ், கள்ளக்குறிச்சி பழனிவேல் திருக்கோவிலூர் செந்தில்குமார், செஞ்சி கலியமூர்த்தி, திருக்கோவிலூர் ராஜ்குமார், உளுந்தூர்பேட்டை சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய உண்மையறியும் குழு, சம்பந்தப்பட்ட ஊருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை விசாரித்து காவல்துறை அதிகாரிகளிடம் முறையான புகார் தெரிவித்து, அங்கு நடந்த நிகழ்வுகள் என்ன என்பதை ஆராய்ந்து, சமூகத்திற்கும், ஊடகத்திற்கும் வெளிப்படுத்துவதற்காக இந்த குழு நாளை அங்கே செல்ல உள்ளது. அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில், மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை மேற்கொள்ள உள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Vanniyar Woman Saraswathi Murder Case PMK Takes Action about it 16 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->