கோவிந்தா கோஷத்துடன்.. வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்.!!
Kalazhagar came to vaigai river and blessed devotees
மதுரையின் சிறப்பு மிக்க நிகழ்வுகளில் ஒன்றான உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் அதனை தொடர்ந்து நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அழகர் மலையில் இருந்து சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு கையில் கைத்தடியில் நீர் இயக்கம்பு ஏந்தி தங்கப்பள்ளத்தில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார். நேற்று இரவு 10 மணியளவில் தங்களக்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தடைந்த கள்ளழகர் இன்று அதிகாலை 3 மணி அளவில் வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.

அந்தக் குதிரை வாகனத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து வைகை ஆற்றில் இறங்க புறப்பட்ட கள்ளழகரை வரவேற்க முன்கூட்டியே வீரராகவ பெருமாள் வெள்ளி குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை வந்தடைந்தார். வீரராகவ பெருமாள் வரவேற்க பச்சை நிறப்பட்டு தங்க குதிரை வாகனத்தில் வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணை முட்டும் அளவிற்கு கோஷம் எழுப்பினர்.
English Summary
Kalazhagar came to vaigai river and blessed devotees