ஆ.ராசா கைய வெட்டுவோம்.. தொட்டு பாரு அப்புறம் இருக்கு - கடுமையாக எச்சரிக்கை விடுத்த அமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "ஜெயலலிதா குறித்து பேச ராசாவுக்கு அருகதையே இல்லை காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டியவர் ராசா. இந்த விஷயம் ஊருக்கே தெரியும். 

இப்படிப்பட்ட மோசமான நிலையில் ஏழரை கோடி மக்களின் இதயத்தில் வாழ்ந்து வரும் புரட்சித்தலைவி அம்மா குறித்து அவருக்கு பேச அருகதை இருக்கிறதா? ராசாவுக்கு நாவடக்கம் அவசியம். உலக தத்துவங்களை எல்லாம் அவர் பேசுகிறார். அவரை விட எங்களுக்கு நன்றாகவே பேச தெரியும். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் ஏதோ ஓர் எழுத்து எழுதுவோம், இடிப்போம் என்று கூறுகிறார். ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது கை வெட்டப்பட்டும். வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். அம்மா பற்றி இழிவாக பேசி கொண்டிருக்கும் நேரத்திலேயே ஒரு ராசா இல்ல., ஓராயிரம் ராசா வந்தாலும் இருக்கிற இடம் தெரியாமல் அழிந்து போவார்கள்." என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadambur raju speech about aa rasa


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal