கடலூரில் போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி! - Seithipunal
Seithipunal


கடலூர்: ஜவான் பவான் சாலையில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை கொடியசைத்து, கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

இதனை தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. ராஜாராம், துணை எஸ்.பி. பிரபு, உதவி ஆணையர் லூர்துசாமி, கோட்ட கலால் அலுவலர் மகேஷ் ஆகியோர் முன்னிலை போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்த பேரணி கடலூர் ஜவான் பவன் சாலையில் தொடங்கி அண்ணா பாலம் வழியாக கடலூர் டவுன்ஹால் வரை சென்று முடிவடைந்தது. 

இதில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா,  தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மாநகராட்சி கவுன்சிலர் சரத் தினகரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி,  கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், கல்லூரி மாணவ -மாணவிகள், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் போன்றோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadalur drug eradication awareness


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->