தமிழக பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை: பக்கா பிளான்  போட்ட ஜே.பி.நட்டா! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. 

தமிழக பாஜக சார்பில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு அரசியல் பணிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பா. ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகின்ற 11ஆம் தேதி சென்னை வர உள்ளார். 

அவரது இந்த பயணம் அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது தமிழக பாஜக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். 

சென்னை அடுத்துள்ள காட்டாங்குளத்தூர் அருகே பா. ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தமிழக பாஜனதா நிர்வாகிகள் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள் ஆகியோரை சந்திக்க உள்ளார். 

மேலும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, வலைதள பிரசாரம், மகளிர் அணி, இளைஞரணி, சட்டப்பிரிவு உள்ளிட்ட 38 குழுக்கள் ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு சென்னை கீழ்பாக்கம் அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JP Nadda plan consult bjp officials


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->