முடிவை அறிவித்த நீதிபதி - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு என்ன ஆகப்போகிறது..? - Seithipunal
Seithipunal


ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இதில் பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது விரும்பத் தகாத சம்பவங்களும் நடைபெற்றன.விரும்பத் தகாத சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்திஅறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரனை தமிழக அரசு நியமித்தது.

அவர் தமிழகம் முழுவதும் சென்று ஜல்லிக்கட்டின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் மதுரை வந்திருந்த அவர் 14-ஆவது முறையாக மதுரையில் தமது விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

ஜல்லிக்கட்டு விசாரணை விரைவில் நிறைவு பெறும் என விசாரணை நடத்தி வரும், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கூறினார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விசாரணையில் ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்களை நேரில் அழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,மாணவர்கள் நலன் கருதி அவர்கள் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற அறிக்கையில் பரிந்துரை செய்ய இருப்பதாகக் கூறினார்.

English Summary

jallikattu protest investigation going to be end


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal