மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், 'தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பிறந்த நாள் இன்று. தமிழக மக்களின் நலனுக்காகவும் சமூக நலனுக்காகவும் அவர் செயல்படுத்திய நலத்திட்டங்கள் என்றும் அவரது புகழை கூறும்' என குறிப்பிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் வலைதளத்தில், 'பணிந்து நின்று தான் பணி செய்ய வேண்டும் என்பதில்லை. 

துணிந்து நின்றும் பணி செய்யலாம்... என்பதை நிரூபித்த பெண் ஆளுமை தான் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா. அவர் மீது காட்டிய தனி அன்பும் பண்பும் என்றும் என் நினைவில்..' என குறிப்பிட்டுள்ளார்.
 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

J Jayalalithaa 76th Birthday Leaders greetings


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->