சிவகாசி || பேருந்துக்குள் ஏறி நடத்துனரைத் தாக்கிய மாணவர்கள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அரசு போக்குவரத்து கழகத்தின் சிவகாசி கிளையில் கடந்த பதின்மூன்று வருடங்களாக நடத்துநராக பணிபுரிந்து வரும் சுரேஷ் தற்போது விருதுநகரில் இருந்து சிவகாசிக்கு செல்லும் அரசுப் பேருந்து தடத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில், இன்று சுரேஷ் பணியில் இருந்த போது பேருந்தில் பயணம் செய்த ஐடிஐ மாணவர்கள் இரண்டு பேர் மதுபோதையில், விசிலடித்து தகாத வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். 

மாணவர்களின் இந்த செயல் பயணிகளுக்கு இடையூறாக இருந்தால் இதனை நடத்துனர் சுரேஷ் தட்டி கேட்டுள்ளார். ஆனால், அவருடன் மாணவர்கள் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து, நடத்துனர் சுரேஷ் சிவகாசி சாலையில் உள்ள பஜார் காவல் நிலையத்தில் இருவர் மீதும் புகார் அளித்துவிட்டு, அங்கேயே இறக்கிவிட்டு சென்றார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் சுரேஷை தாக்க திட்டமிட்டு, பேருந்து சிவகாசிக்குச் சென்றுவிட்டு மீண்டும் அதே வழித்தடத்தில் பி.குமாரலிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே வந்த போது, மாணவர்கள் இருவரும் பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். 

பின்னர் பேருந்துக்குள் ஏறி நடத்துநர் சுரேஷை தாக்கியிருக்கின்றனர். இதில் காயமடைந்த சுரேஷ், தன்னைப் பணி செய்யவிடாமல் வழிமறித்து பேருந்துக்குள் ஏறி தாக்கிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆமத்தூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iti students attack govt bus conductor in sivakasi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->