ஐ.டி ரெய்டு ரகசியம் கசிந்தது எப்படி? விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!! - Seithipunal
Seithipunal


பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு மீதான 3 புகார்களின் அடிப்படையில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்த திட்டமிட்டு சென்னையில் தங்கி இருந்தனர். திட்டமிட்டபடி நேற்று காலை 6:30 மணிக்கு வருமானவரித்துறை சோதனையானது தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் தொடங்கியது. ஆனால் வருமான வரித்துறை சோதனை குறித்தான தகவல் நேற்று இரவே கசிந்து திமுக தரப்பு காதுகளுக்கு எட்டியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு குறித்தான தகவல் முன்பே கசிந்தது எப்படி? என தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தமிழகம் முழுவதும் 120 தனியார் டிராவல்ஸ் மூலம் கார்கள் வாடகைக்கு வாங்கியதே தகவல் கசிய காரணம் என்பது வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

மொத்தமாக கார்கள் முன்பதிவு செய்யப்பட்டதால் ஓட்டுனர்கள் மூலம் தகவல் கசிந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் தனி தனியாக விசாரணை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT officials found out reason in itraid info leaked


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->