தமிழகத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சலால் 282 பாதிப்பு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்புளுன்ஸா என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 282 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இன்புளுன்ஸா என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் பேசியதாவது ; 

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்புளுன்ஸா காய்ச்சால் யாரும் சிகிச்சை பெறவில்லை. எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 129 குழந்தைகளில் 121 பேருக்கு சாதாரண காய்ச்சல். 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்.

தமிழகத்தில் 243 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதகவும் ,தேவையான அளவு மருந்து கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Influenza virus affected 282 peoples in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->