தமிழகம் முழுவதும் குவிக்கப்பட்ட 40 போலீஸ்! தீவிர வாகன சோதனை! - Seithipunal
Seithipunal


வருகின்ற 15ஆம் தேதி நாடு முழுவதும் 76 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு சென்னையில் ஒன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூட கூடிய இடங்களில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இது மட்டுமல்லாமல் தனியார் தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் காவலர் பதக்கம் ஆறு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை கூடுதல் ஆணையர், கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தேனி காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் உள்ளிட்ட ஆறு பேருக்கு இந்த முதல்வர் காவலர் பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Independence day 2023 TN Police


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->