பாஜக எம்.எல்.ஏ-வின் பணமா? தமிழக எல்லையில் மோப்பம் பிடித்த ஐ.டி.. அதிரடி ரெய்டு.!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரஷர் உரிமையாளர் லோகேஷ் குமார் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் 100 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 1.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது காரில் 10 லட்சம் ரூபாய் சிக்கிய நிலையை வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பெயரில் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

file image 

பல மணி நேரம் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு லோகேஷ் குமார் வீட்டில் இருந்து 100 பவுன் தங்க நகை மற்றும் 1.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நான் பணம் மற்றும் நகைகளை வங்கி எடுத்துச் சென்று வருமானவரித்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கிரஷர் உரிமையாளர் லோகேஷ் குமார் கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ பசவராஜின் உதவியாளர் மஞ்சுநாதனின் மருமகனாவார். அதேபோன்று லோகேஷ் குமாருக்கு சொந்தமான கல்குவாரியிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income tax seized rs1crs and 8kg gold in BJP MLA related place


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->