விழுப்புரத்தில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல்..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...! எச்சரிக்கையாக இருங்கள்..!! - Seithipunal
Seithipunal


தற்போது இந்தியா முழுவதும் பருவமழையானது பெய்து., ஆங்காகே வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவின் கேரளா., மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும்., பல வடமாநிலங்களும் நீரில் தத்தளித்து வருகிறது. பொதுவாக மழைக்கு பின்னர் சில நேரம் நோய்கள் மற்றும் தொற்றுகள்., காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்றாகும். 

அந்த வகையில்., தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கேரள மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவ துவங்கியது. இதனையடுத்து தமிழக - கேரள எல்லையில் உள்ள பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளும் விழிப்புணர்வாகி மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. 

kerala flood, kerala, கேரளா, கேரளா வெள்ளம்,

இந்த நிலையில்., விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி அருகேயுள்ள திம்மலை கிராமத்தை சார்ந்தவர் சண்முகம். இவரது மகனின் பெயர் அருண்குமார் (வயது 16). இவர் தியாகதுருகம் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைபள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் நல்ல உடல் நிலையுடன் இருந்து வந்த நிலையில்., திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

கொசு, mosquito, டெங்கு காய்ச்சல், dengue fever,

இதனையடுத்து கடந்த ஐந்தாம் தேதியன்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அருண்குமார் அனுமதி செய்யப்பட்ட நிலையில்., மருத்துவர்கள் ஒரு வாரம் வரை சிகிச்சையளித்துள்ளனர். ஒரு வார சிகிச்சையும் பலனின்றி காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளதை அடுத்து., மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அருண்குமார் அனுமதி செய்யப்பட்ட நிலையில்., அருண்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., டெங்கு காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து தீவிர கண்காணிப்பு வார்டில் அனுமதி செய்யப்பட்டு., மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vilupuram boy affected dengue fever admit in hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->