கரோனாவிற்கு தமிழகத்தில் 2 ஆவது பலி.. டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது. 

தமிழகத்திலும் கரோனா வைரஸிற்கு பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நேற்று வரை 411 ஆக இருந்த நிலையில், பலி எண்ணிக்கை ஒன்றாக இருந்தது. டெல்லி சென்று திரும்பிய நபர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த நபர் கரோனாவால் பலியாகியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த நபர், டெல்லி மாநாட்டிற்கு சென்ற நிலையில், இவர் விழுப்புரம் மருத்துவமனையில் காரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இவருக்கு நேற்று இரவு முதலாகவே மூச்சுத்திணறல் பிரச்சனை அதிகளவு இருந்து வந்த நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த தகவலை சுகாதாரத்துறை உறுதி செய்து அறிவித்துள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான நபர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in villupuram corona virus death


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal