சிறுமியை திட்டம் போட்டு சீரழித்த குடும்பம்.. பைத்தியக்காரியாய் பித்து பிடித்து அலைந்த சோகம்.. தி.மலையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வரும் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமி தனது பாட்டியுடன் தங்கியிருந்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் அங்குள்ள பெங்களூரில் பணியாற்றி வருகின்றனர். மேலும்., மாணவியின் பாட்டி வீட்டின் மேல் மாடியை தேவாலயமாக உபயோகம் செய்து வந்துள்ளார்.

இந்த தேவாலயத்தில் இதே பகுதியை சார்ந்த செல்லத்துரை (வயது 20) என்பவன் பணியாற்றி வந்த நிலையில்., கடந்த 2017 ஆம் வருடத்தின் போது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சில மாதங்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளான். 

இந்த நேரத்தில்., கடந்த செப்டம்பர் மாதத்தின் 21 ஆம் தேதியன்று இரவு நேரத்தில், சிறுமியின் பாட்டியை காண திருவண்ணாமலையை சார்ந்த நபரொருவர் கண்பார்வையற்ற நைஜீரிய நாட்டினை சார்ந்த வாலிபரை அழைத்து வந்துள்ளார். பின்னர் நைஜீரியரை திருமணம் செய்து கொண்டால் சிறுமியை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வார் என்று ஆசை வார்த்தையை கூறியுள்ளார்.

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இந்த விஷயத்தை நம்பிய மாணவி மற்றும் அவரது பாட்டி சென்னையில் இருக்கும் குரோம்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு செப்டம்பர் மாதத்தின் 24 ஆம் தேதியன்று சென்றுள்ளனர். இந்த நேரத்தில்., நைஜீரியர் 3 நாட்கள் மாணவியுடன் தங்கியிருந்த நிலையில்., அவனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 

இது குறித்த விஷயத்தை அறிந்த சிறுமியின் பெரியம்மா, சிறுமியை மீட்டு திருவண்ணாமலைக்கு மீண்டும் அழைத்து வந்த நிலையில்., இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமியை அக்டோபர் மாதத்தின் போது மீட்டு அவரது இல்லத்தில் சேர்த்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் செல்லத்துரை., மாணவியின் பாட்டி மற்றும் நைஜீரியன் உள்ளிட்ட நாள்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvannamalai girl sexual harassment police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->