ஸ்தம்பித்து போன தென்காசி இரயில் நிலையம்.! இரயில்வே அதிகாரிகள் தெரிவித்த அசத்தலான பதில்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறையானது விரைவாக விடப்பட்டது. இந்த விடுமுறைக்கு பின்னர் இந்திய முழுவதும் பாராளுமன்ற தேர்தலானது நடைபெற்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது..

பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு தேர்வுகள் வைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில்., ஒன்றன்றை மாத காலம் எவ்வாறு சென்றது என்ற ஏகத்துடனே மாணவ - மாணவியர்கள் பள்ளிகளுக்கு செல்ல தயாராகிவிட்டனர். 

விடுமுறையை சந்தோசமாக கொண்டாடிய குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தயாராகி இன்று செல்ல விருக்கும் நிலையில்., விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற குழந்தைகள் அனைவரும் கடந்த சில நாட்களாக மீண்டும் தங்களின் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். இதன் காரணமாக இரயில் மற்றும் பேருந்துகளில் மக்களின் கூட்டமானது அலைமோதியது. 

இந்த நிலையில்., திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மக்கள் மதுரை., இராசபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளிலும்., திருநெல்வேலியிலும் பணியாற்றி தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தென்காசி இரயில் நிலையத்தில் இருந்து காலையிலேயே இராசபாளையம் வழியாக மதுரை மற்றும் தென்காசி - திருநெல்வேலி இரயில்கள் உள்ளதால் மக்கள் அதனை உபயோகம் செய்து வருகின்றனர். 

சாதாரண நாட்களிலேயே மதுரை = செங்கோட்டை வண்டி மற்றும் திருநெல்வேலி = செங்கோட்டை இரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் சூழலில்., விடுமுறையை ஒட்டி மக்களின் கூட்டமானது தென்காசி இரயில் நிலையத்தில் நிரம்பி வழிந்தது. இது குறித்து அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கையில்., குற்றாலம் சீசன் நேரத்தில் கூட இவ்வுளவு கூட்டம் இல்லை., ஆனால் தற்போது அதிகமாக உள்ளது என்று தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in tenkasi railway station have a massive peoples waiting for train


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->